விளையாட்டு

நடுவர் பணியாற்றும் போது ரசித்துப் பார்க்கும் 3 பேட்ஸ்மென்கள் சச்சின், காலீஸ், கோலி - நடுவர் இயன் கோல்டு சுவாரஸ்யம்

ஏஎன்ஐ

களத்தில் நடுவர் பணியாற்றும் போது 3 பேட்ஸ்மென்களின் ஆட்டத்தை தான் ரசித்துப் பார்த்திருப்பதாகவும் அவர்கள் ஜாக் காலீஸ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என்று நடுவர் இயன் கோல்டு தெரிவித்துள்ளார்.

ஆனால் ரிக்கி பாண்டிங்கின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு துரதிர்ஷ்டவசமாக அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்று வருந்தினார் ஐசிசி முன்னாள் உயர்மட்டக் குழு நடுவரான இயன் கோல்டு.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் கூறியதாவது:

ஜாக் காலீஸ், அவர் ஆடுவதை பார்ப்பதில் எனக்கு நிரம்ப இஷ்டம். அவர் மிகமிகச் சிறந்த வீரர். பிறகு சச்சின், அவருக்கு அடுத்ததாக விராட் கோலி. ரிக்கி பாண்டிங்கின் சிறந்த இன்னிங்ஸை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதது என் துரதிர்ஷ்டம்தான். பாண்டிங் தனித்துவமான வீரர், தனித்துவமான கேப்டன், பெருமைக்குரிய ஆஸ்திரேலியர் அவர்.

நான் நடுவர் பணிக்கு வந்த சமயத்தில் பாண்டிங் கொஞ்சம் தளர்ந்து விட்டார். ஜாக் காலிஸ் பேட்டிங்கை நாள் முழுதும் பார்ப்பேன். விராட் கோலியின் பேட்டிங்கையும் அவ்வாறு ரசிப்பேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஹீ வாஸ் தி மேன்.

இவ்வாறு கூறினார் இயன் கோல்டு. இவர் ஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவிலிருந்து 2019-ல் ஓய்வு பெற்றார். 13 ஆண்டுகால நடுவர் வாழ்க்கையில் 250சர்வதேச போட்டிகளில் நடுவர் பணியாற்றியுள்ளார் கோல்டு.

SCROLL FOR NEXT