விளையாட்டு

அணியின் நலனுக்காக என் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்தினேன்: ஷிகர் தவண்

பிடிஐ

இலங்கைக்கு எதிராக 134 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் ஷிகர் தவண் பொறுமையும் நிதானமும் மிக்க ஒரு இன்னிங்சை ஆடியது குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

2-ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தவண் கூறியதாவது:

என்னுடைய இயற்கையான ஆக்ரோஷ அணுகுமுறையைக் கட்டுப்படுத்துவது எனக்கு சிரமமாக இல்லை. இப்படி ஆடுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. பந்துகளை ஆடாமல் விடுவதும் கூட பிடித்திருக்கிறது. அணிக்கு இத்தகைய ஆட்டம் தேவைப்படுகிறது.

நான் கொடுத்த கேட்ச்களை அவர்கள் விட்டனர், மகிழ்ச்சி. ஒரு பேட்ஸ்மெனாக நீண்ட நேரம் கிரீசில் இருக்க விரும்புகிறேன். எனவே கேட்சை விட்டால் அது நம்மை விழிப்படையச் செய்கிறது. அதுதான் நடந்தது.

நான் கேட்சைக் கோட்டைவிட்ட போது கையில் காயம் ஏற்பட்டது. அது எனது பேட்டிங்கையும் சற்றே பாதித்தது, அதனால்தான் அதிக ஷாட்களை ஆடவில்லை.

வலி இல்லையெனில் எனது ஸ்கோர் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

விராட் கோலி அருமையாக ஆடினார், அந்த பெரிய பார்ட்னர்ஷிப் ரன்களே முக்கியமாக அமைந்துள்ளது. அவருடன் ஆடுவதை சிறப்பாக உணர்கிறேன். அவர் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர், அவர் இறங்கியவுடன் நம் அழுத்தம் குறைந்து விடுகிறது.

அவர் எல்லா விஷயங்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டு விடுவார், நான் ஓடினால் மட்டும் போதும். அவர் ஆக்ரோஷமான பேட்ஸ்மென் என்பதால் ரன்களும் வந்து கொண்டிருக்கும் அது நமக்கு கொஞ்சம் இளைப்பாறுதலைத் தரும்” என்றார்.

SCROLL FOR NEXT