கரோனா பாதிப்பையெல்லாம் ஓரங்கட்டுவோம் என்ற யோசனையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு குறுந்தொடரை ஆடலாம் என்று பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் இருநாட்டு வாரியங்களுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடராக இது இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனாலும் அரசு அனுமதி அளித்தால்தான் வெளிநாட்டுப் பயணம், கிரிக்கெட் சாத்தியமாகும்.
இருநாடுகளுக்கும் ஆன சமீபத்திய ஒருநாள் தொடர் மார்ச்சில் ரத்து செய்யப்பட்டதை ஈடுகட்ட இந்த டி20 தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இருவாரியங்களுக்கும் பொது ஒளிபரப்பு நிறுவனம் இருப்பதால் தொடரை நடத்துவதில் சிக்கல் இருக்காது என்றும் பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ மருத்துவக் குழு உதவிப்பயிற்சியாளர்களுடன் சேர்ந்து ஆலோசித்து ஜூன் மாதத்தில் பயிற்சியைத் தொடங்க பரிசீலித்து வருகிறது.
இந்த தென் ஆப்பிரிக்கா, இந்தியா தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.