டெலி கான்பரன்சில் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வாரிய இயக்குநருமான கிரேம் ஸ்மித் ஐசிசி தலைமைப் பொறுப்புக்கு சவுரவ் கங்குலிதான் பொருத்தமானவர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் ஷஷாங்க் மனோகர் பொறுப்பு முடிவுக்கு வருவதால் அடுத்த தலைவராக கங்குலிக்கு தன் ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளார் கிரேம் ஸ்மித்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சி.இ.ஓ. ஜாக் ஃபால், ஸ்மித்தின் இந்தக் கருத்தை ஆதரித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்மித் கூறும்போது, “சவுரவ் கங்குலி போன்ற ஒருவர் ஐசிசி தலைமைப் பீடத்துக்கு வருவது பிரமாதமான ஒன்று. கிரிக்கெட்டுக்கும் இது நல்லது.
அவர் உயர்மட்ட கிரிக்கெட்டில் ஆடியுள்ளார், எனவே அதன் தேவைகளை நிர்வாக ரீதியாக அறிந்தவர் கங்குலி. அவர் மேல் மரியாதை உண்டு. அவர் தலைமையில் முன்னேற்றம் காண்போம்.
எதிர்கால்ப பயணத் திட்டங்களில் இந்தியாவின் தலைமை பயனளிக்கும்” என்றார் கிரேம் ஸ்மித்.