எங்கள் அணி தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு சிறப்பாக ஆடி பெரிய அளவில் ரன் சேர்ப்பதும், எதிரணியின் பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்துவதும் அவசியம் என டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்தார்.
டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. ஆனால் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 18.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இதன்பிறகு கேதார் ஜாதவ் கூறியது: புதிய பந்தில் நாங்கள் போதுமான அளவுக்கு விக்கெட் வீழ்த்தவில்லை.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நாங்கள் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். ரன் குறைவு என்பதால் தாக்குதல் பீல்டிங்கை அமைத்தோம். ஆனால் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிவிட்டனர்” என்றார்.
டெல்லி மைதானம் குறித்து ஜாதவிடம் கேட்டபோது, “இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானம்.
அதேநேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஏதுவாக உள்ளது. இதேபோல் பவுன்சரும் வீச முடியும்” என்றார்.