விளையாட்டு

ஐபிஎல் தொடர் நடக்காவிட்டால் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு- பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும்வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கால வரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி கூறியதாவது:

எங்களுடைய நிதி நிலைமையை நாங்கள் ஆராய வேண்டும். கைவசம் எவ்வளவு உள்ளதுஎன்பதை அறிந்த பிறகு ஒரு முடிவெடுக்க வேண்டும். இந்த ஆண்டுஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படும். ஐபிஎல் தொடர் நடைபெற்றால் ஊழியர்களின் சம்பளத்தில்கை வைக்க வேண்டிய நிலைமைக்கு செல்ல வேண்டியதில்லை. அனைத்தையும் சிறப்பாக நிர்வகித்து விடுவோம். ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் அதன் ஈர்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். இவ்வாறு கங்குலி கூறினார்.

SCROLL FOR NEXT