டெவன் பிலிப் கான்வே. 
விளையாட்டு

நியூஸி. அணியில் தெ.ஆ.வைச் சேர்ந்த புதிய ‘பேட்டிங் மாஸ்ட்ரோ’- புதிய ஸ்டார் என எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

நியூஸிலாந்து அணி வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இடது கை பேட்ஸ்மென் ஆன டெவன் பிலிப் கான்வே என்ற புதிய இடது கை வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரை புதிய பேட்டிங் மாஸ்ட்ரோ என்றும் புதிய ஸ்டார் என்றும் நியூஸி. கிரிக்கெட் வர்ணிக்கிறது.

இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, காரணம் நியூஸிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட்டில் 3 வடிவங்களிலும் டாப் ஸ்கோரர் டெவன் பிலிப் கான்வேதான். இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். நியூஸிலாந்து அணிக்கு ஆட 3 ஆண்டுகள் இவர் நியூஸிலாந்தில் வசிக்க வேண்டும்.

வரும் ஆகஸ்ட் மாதம் இவர் நியூசிலாந்து அணிக்குஆட தகுதி பெறுகிறார். 28 வயதாகும் கான்வே 103 முதல் தரப் போட்டிகளில் 6674 ரன்களை 47 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

17 சதங்கள், 30 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் கிட்டத்தட்ட பந்துக்கு ஒரு ரன் விகிதத்தில் எடுத்த 327 நாட் அவுட். லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் 81 போட்டிகளில் 3,104 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 45. ஸ்ட்ரைக் ரேட் 86. எட்டு சதங்கள் 18 அரைசதங்கள். அதிகபட்ச ஸ்கோர் 152.

70 டி20 போட்டிகளில் 2,221 ரன்கள், 39.66 என்ற சராசரி 124.84 என்ற ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட். 2 சதங்கள் 14 அரைசதங்கள். இதில் சுமார் 1,000த்துக்கும் கூடுதலான ரன்களை பவுண்டரிகள் சிக்சர்களிலேயே விளாசியுள்ளார்.. இந்த 2,221 ரன்களில் 237 பவுண்டரிகள் 52 சிக்சர்கள் அடங்கும்.

வீரர்கள் ஒப்பந்தத்தில் இவரைச் சேர்த்தது பற்றி கெவின் லார்சன் கூறும்போது, “ 3 வடிவங்களிலும் இவரது பார்ம் அப்படி. இவரைப் புறக்கணிப்பது கடினம். நியூஸிலாந்து பேட்டிங்கில் கான்வே ஒரு பெரிய நிகழ்வாக இருகும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT