கரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளே தள்ளி வைக்கப்பட்டு விட்டது, இதில் ஐபிஎல் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன என்ற கேள்விகள் இருக்கும் நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் நடக்காது ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி நஷ்டம் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்தத் தொடர் நடக்காமல் போனதில்லை.
“ஐபிஎல் ரத்து ஆனால் அல்லது நடக்காமலே போனால் பிசிசிஐக்கு பெரிய அளவு வருவாய் இழப்பு ஏற்படும், இதற்கும் கூடுதலாகவும் இழப்பு ஏற்படலாம்” என்கிறார் அருண் துமால்.
“இந்த ஆண்டு நடக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எத்தனை போட்டிகள் நடக்காது என்பதை வைத்தே பிசிசிஐ இழப்பை அறுதியிட முடியும்.
ஐபிஎல் பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டு 6.7 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது.” என்றார் துமால்.
2022 வரை ஒளிபரப்பு உரிமைகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 220 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது. 2020-ல் 400 மில்லியன் டாலர்கள் வருவாய் என்று நாக்கைத் தொங்கப்போட்டுக் காத்துக் கொண்டிருந்தது.
ஆனால் இதற்காக ‘வீரர்களின் சம்பளத்தைக் குறைப்போம் என்று கூறக் கூடாது, அப்படிப்பட்ட திட்டமில்லை’ என்றார் துமால்.