விளையாட்டு

அவர்கள் பந்து வீசினால் எல்லாமே அவுட், பேட்டிங் செய்தால் எல்லாமே நாட் அவுட்: இதுதான் ஆஸ்திரேலியா- ஹர்பஜன் கிண்டல்

செய்திப்பிரிவு

அஸ்வினுடன் இன்ஸ்டாகிராமில் நடத்திய உரையாடலில் 2001 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மறக்க முடியா கொல்கத்தா டெஸ்ட் பற்றி உணர்வு பூர்வமாக ஹர்பஜன் பேசினார்.

அப்போது மெக்ரா விக்கெட்டை தான் வீழ்த்திய போது மெக்ராவின் எதிர்வினை பற்றியும் கிண்டலாகக் குறிப்பிட்டார் ஹர்பஜன் சிங்.

இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:

மெக்ராவுக்கு வீசிய அந்த பந்து நேர் பந்து, டிஆர்எஸ் இருந்திருந்தால் பந்து ஸ்டம்பைத் தாக்குவது நிரூபிக்கப்பட்டிருக்கும். ஆனால் மெக்ரா அதிருப்தியுடன் அங்கேயே நின்றார், இதுதான் மெக்ரா, ஆஸ்திரேலியா பெரிய பெரிய வீரர்களை உருவாக்கியுள்ளது, ஆனால் தோற்றால் மோசமாகத் தோற்பார்கள். நல்ல சவுகரியமான நிலையிலிருந்து தோற்பார்கள். எனவே அது அவர்களுக்கு கஷ்டமாகவே இருக்கும்.

அதுதான் ஆஸ்திரேலியா. அவர்கள் பவுலிங் செய்யும் போது எல்லாமே அவுட் தான் என்று நினைப்பார்கள், பேட்டிங் செய்யும் போது எல்லாமே நாட் அவுட் தான். 2001 தொடரில் நிறைய தீர்ப்புகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் ஆட்டம் அப்படித்தானே போகும்.

2008- தொடருக்காக ஆஸ்திரேலியா செல்லும் போது நமக்கு நடக்கவில்லையா?

இவையெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம், அதை அப்படியே விட்டு விட்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். இப்போது வந்த் சிலர் கில்கிறிஸ்ட் நாட் அவுட் என்று புலம்புகின்றனர். நாட் அவுட்டாக இருந்தால் என்ன? எவ்வளவு முறை அவரை வீழ்த்தியிருப்பேன், முதல் பந்தில் இல்லை எனில் இரண்டாவது பந்தில் அவரை வீழ்த்தியிருப்பேன்.

இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

SCROLL FOR NEXT