விளையாட்டு

பிஎஸ்ஏ ஸ்குவாஷ்: இறுதிச்சுற்றில் சவுரவ் கோஷல்

செய்திப்பிரிவு

கொலம்பியாவின் பொகோட்டா நகரில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் இறு திச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதியில் சவுரவ் கோஷல் 11-8, 12-10, 7-11, 4-11, 12-10 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரான கொலம்பியாவின் மிக்கேல் ரோட்ரிகஸைத் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களை அசத்தலாகக் கைப்பற்றிய கோஷல், அடுத்த இரு செட்களை இழந்தார். இதனால் வெற்றியைத் தீர்மானிக்க 5-வது செட்டுக்கு நகர்ந்தது ஆட்டம். அதில் ஒரு கட்டத்தில் 7-10 என்ற கணக்கில் பின்னடைவைச் சந்தித்த கோஷல், அதன்பிறகு தொடர்ச்சியாக 5 புள்ளிகளைப் பெற்று வெற்றி கண்டார். கோஷல் தனது ஸ்குவாஷ் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும்.

வெற்றி குறித்துப் பேசிய கோஷல், “இன்றைய (நேற்றைய) வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி யடைந்துள்ளேன். ரோட்ரிகஸை வீழ்த்த சிறப்பாக ஆடுவது அவசி யம் என்பதை நான் ஏற்கெனவே கணித்திருந்தேன்” என்றார்.

SCROLL FOR NEXT