கோப்புப்படம் 
விளையாட்டு

ஐசிசி டி20, ஒருநாள் டெஸ்ட் தரவரிசை ,: 4 ஆண்டுகளுக்குப்பின் முதலிடத்தை இழந்தது இந்தியா: டி20-யில் பாக். பரிதாபம்: அதிரடியான மாற்றங்களுடன் அறிவிப்பு

பிடிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் கடந்த 2016 அக்டோபர் மாதம் முதல் முதலிடத்தில் இருந்து வந்த இந்திய அணி 4 ஆண்டுகளுக்குப்பின் முதலிடத்தை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல் டி20 தரவரிசையிலும் முதல்முறையாக முதலிடத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

முதலிடத்திலிருந்து சரிந்த இந்திய அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியிடம் 2-வதுஇடத்தை இழந்து 3வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்தபோதிலும், இந்திய அணி இந்த பின்னடைவைச் சந்தித்துள்ளது

கடந்த 2016-17-ம் ஆண்டிலிருந்து 12 டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே தோற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து விளையாடிய 100 சதவீத போட்டிகள், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் 50 சதவீத போட்டிகளை கணக்கீடாக வைத்து இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இதன்படி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 26 போட்டிகளில் 3,028 புள்ளிகளுடன் 116 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. நியூஸிலாந்து அணி 21 போட்டிகளில் 115 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணி 27 போட்டிகளில் 3,085 புள்ளிகளுடன் 114 ேரட்டிங் புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குச் சரி்ந்துள்ளது. முதல் 3 இடங்களில் இருக்கும் இந்தியா, ஆஸி, நியூஸிலாந்து அணிகளும் தலா ஒரு புள்ளி வித்தியாசத்துடனே இருக்கின்றன. ஆதலால் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகள் 3அணிகளுக்கும் முக்கியமாக இருக்கும்.

இங்கிலாந்து(4-வது இடம்), இலங்கை(5-வது), தென் ஆப்பிரிக்கா(6), பாகிஸ்தான்(7), மே.இ.தீவுகள்(8) ஆப்கானிஸ்தான்(9), வங்கதேசம் 10-வது இடத்திலும் உள்ளன

டி20 தரவரிசை

டி20 தரவரிசை கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒருமுறை கூட ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்தது இல்லை. ஆனால், முதல்முறையாக இந்த முறை ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. 19 போட்டிகளில் 278 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை ஆஸி அணி பிடித்துள்ளது.

2018 ஜனவரி முதல் 27 மாதங்களாக முதலிடத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் அணி 21 போட்டிகளில் 261 ரேட்டிங் புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 268 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 2-வது இடத்திலும், இந்திய அணி 35 போட்டிகளில் 266 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது

5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா, 6-வது இடத்தில் நியூஸிலாந்து, 7-வது இடத்தில் இலங்கை அணியும் உள்ளன. 8 முதல் 10 இடங்களில் முறையே வங்கதேசம், மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் இருக்கின்றன

ஒருநாள் தரவரிசை

ஒரு நாள் தரவரிைசயைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணி 127 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. நியூஸி(3-வது), தென் ஆப்பிரிக்கா(4-வது), ஆஸ்திேரலியா(5-வது) இடத்திலும் உள்ளன.

102 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது, 7-வது முதல் 10வது இடம் வரை முறையே வங்கதேசம், இலங்கை, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT