கடந்த மே 2018-ல் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தென் ஆப்பிரிக்க அதிரடி, 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார், ஆனால் தனியார் டி20 லீகுகளில் தொடர்ந்து அவர் ஆடிவருகிறார்.
இந்நிலையில் மீண்டும் தன்னை முழு நேர கேப்டனாகச் செயலப்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அழைத்ததாக ஏ.பி.டிவில்லியர்ஸ் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி ஒன்றை தெரிவித்தார்.
ஆனால் அவர் இது தொடர்பாக தெரிவிக்கும் போது, “என் தரப்பில் எனக்கு ஆசையாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா வாரியமும் என்னிடம் மீண்டும் கேப்டனாக முடியுமா என்று கேட்டது.
ஆனால் நான் டாப் பார்மில் இருக்க வேண்டும், என் சக வீரர்களை விட நான் சிறப்பாக ஆட முடிந்தால்தான் கேப்டனாவது சிறப்பாக அமையும் என்று கருதுகிறேன். இந்த பார்மில் இருந்தால் தான் அணியில் இருப்பதற்கான தகுதியுடையவனாக இருப்பேன். அப்போதுதான் விளையாடும் 11 வீரர்களில் ஒருவராக என்னை கருத எனக்கு மனம் வரும்.
நானும் மற்ற வீரர்களும் உணர வேண்டும்., சரி இவர் இந்த இடத்துக்குத் தகுதியானவர் என்று.
இப்போதைக்கு வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, கிரிக்கெட் போட்டிகள் பற்றி நிலவரம் என்னவென்பது தெரியவில்லை” என்றார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.