விளையாட்டு

முகத்தில் விழுந்த அறை: சிஎஸ்கேயிலிருந்து நீக்கப்பட்ட தருணம்- பிளெமிங் என்னிடம் பேசக்கூட இல்லை: அஸ்வின் 

பிடிஐ

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் சஞ்சய் மஞ்சுரேக்கருடன் பேசிய அஸ்வின் 2010 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் உரையாடிய போது அவர் கூறியதாவது:

சிலர் நான் என்னைப்பற்றி நானே உயர்வாக நினைப்பதாகக் கருதுகிறார்கள். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் என் வரைபடத்தில் கோடு கிடைக்கோடானது. அதாவது என் முகத்தில் விழுந்த அறையாக, ‘ஏய் நீ என்ன உன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்ய் நீ இங்கேயே இல்லை’ என்று என் முகத்தில் விழுந்த அறையாகும் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட விஷயம்..

டி20யில் பவுலிங் செய்வது முதல் தர கிரிக்கெட்டை விட சுலபமானது என்று நினைத்திருந்தேன். ஆர்சிபி அணிக்கு எதிரான அந்த மேட்சில் நான் 14, 16, 18, 20 ம் ஓவர்களை வீசினேன். ராபின் உத்தப்பா, மார்க் பவுச்சர் எனக்கு கடினமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தனர். என்னுள் இருந்த இளைஞன் அது எனக்கு ஒரு பாடம் என்று என்னிடம் கூறவில்லை. விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு என்று நினைத்தேன்.

விக்கெட்டையும் எடுக்கவில்லை 40-45 ரன்களை விட்டுக் கொடுத்தேன். அடுத்த ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. நாங்கள் தோற்றோம், நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். இது என்னை படார் என்று அறைந்தது.

அணியிலிருந்து நீக்கப்பட்டேன், ஹோட்டலைக் காலி செய்து கொண்டு வீட்டுக்கு வந்தேன். 2010 உலகடி20 தொடரில் நான் உத்தேச 30 வீரர்கள் பட்டியலில் இருந்தேன். (ஆனால் அவர் தேர்வாகவில்லை என்பது வேறு கதை) ஆகவே என்னை இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தியிருக்கலாம்.

அதற்கு முந்தைய 3 போட்டிகளில் சிறப்பாக வீசினேன், 2 போட்டிகள் போதுமா என்னை அறுதியிட, என்னை ஏன் ஆதரிக்கவில்லை. எந்த ஒரு பவுலரும் இரண்டு போட்டிகளில் அடி வாங்கவே செய்வார்.

ஸ்டீபன் பிளெமிங்குடன் எனக்கு கொஞ்சம் பிரச்சினை இருந்தது, அவர் என்னிடம் பேசவில்லை. அவரை நான் மிகவும் மதித்தேன் ஆனால் அவர் என்னிடம் பேசவில்லை. ஆகவே வீட்டிலிருந்த படியே சிஎஸ்கே போட்டிகளைப் பார்த்தேன். ஒருநாள் இதையெல்லாம் மாற்றுவேன் என்று எனக்குள்ளேயே வாக்குறுதிகள் அளித்துக் கொண்டேன்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

SCROLL FOR NEXT