பிரேஸிலில் வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள இளை யோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான 8 பேர் கொண்ட இந்திய மகளிரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரேஸிலின் சல்வடார் டா பஹியாவில் வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை உலக மகளிர் இளையோர் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு 8 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனு (44 கிலோ எடைப்பிரிவு), நீது (48), பிங்கி (51), மஞ்சு குமாரி (55), சரிதா (59), மனிஷா (63), திவ்யா கக்ரன் (67), பூஜா (72) ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
லக்னோவில் இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய பயிற்சிப் போட்டியில் வெளிப்படுத்திய திறன் அடிப் படையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜி பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.