விளையாட்டு

முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: அகர்வால், பாண்டே சதம்; இறுதிச்சுற்றில் இந்தியா

செய்திப்பிரிவு

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின.

முதலில் பேட் செய்த இந்திய அணியில் மயங்க் அகர்வால்-கேப்டன் உன்முக்த் சந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21.4 ஓவர்களில் 106 ரன்கள் சேர்த்தது. 77 பந்துகளைச் சந்தித்த உன்முக்த் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, மணீஷ் பாண்டே களம்புகுந்தார்.

மறுமுனையில் சிக்ஸர்களை யும் பவுண்டரிகளையும் விளாசிய அகர்வால் 95 பந்துகளில் சதமடித் தார். இதன்பிறகு மணீஷ் பாண்டே சிக்ஸர் அடித்து அரைசதம் கண் டார். தொடர்ந்து வேகம் காட்டிய அகர்வால் 133 பந்துகளில் 5 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 176 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கருண் நாயர் 10 ரன்களில் வெளியேற, பாண்டே 83 பந்துகளில் சதம் கண்டார். அவர் 85 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண் டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் சேர்க்க, இந்தியா 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய தென் ஆப்பி ரிக்க அணியில் டி காக்-டெல்போர்ட் ஜோடி பதிலடி கொடுக்கும் வகை யில் ஆடியது. 5.3 ஓவர்களில் 53 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை கலாரியா பிரித்தார். டெல்போர்ட் 18 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து வெளியேற, ஹென்ரிக்ஸ் களம் புகுந்தார். இதனிடையே டி காக் 86 பந்துகளில் 6 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகம் குறைந்தது.

ஹென்ரிக்ஸ் 109 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ஜோன்டோ 60 பந்து களில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் சேர்த்தபோதும், தென் ஆப்பிரிக்காவால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா.

SCROLL FOR NEXT