விளையாட்டு

இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு: இலங்கை தொடரிலிருந்து ஷிகர் தவண் விலகல், ஸ்டூவர்ட் பின்னி அணியில் சேர்ப்பு

செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியி லிருந்து, காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவண் விலகி யுள்ளார். அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளை யாட மாட்டார். அதேசமயம் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.

காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி யடைந்தது. வரும் 20-ம் தேதி கொழும்பில் 2-வது டெஸ்ட் நடை பெறவுள்ளது.

தொடக்கவீரரான ஷிகர் தவணுக்கு காலே டெஸ்ட் போட்டி யின்போது, வலது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோத னையின்போது, எலும்பில் மிகச் சிறிய அளவிலான விரிசல் ஏற்பட்டி ருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர் நான்கு முதல் 6 வாரம் வரை ஓய்வெடுக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இரு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் விலகியுள்ளார்.

பின்னி சேர்ப்பு

ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி இந்திய அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். 2-வது டெஸ்ட் தொடங் குவதற்கு முன்பாக அவர் இந்திய அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட அணியில் பின்னி கூடுதலாக சேர்க்கப்படுகிறார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 6-வது வரிசையில் இறங்கி பேட்டிங் செய் யக்கூடிய பின்னி, 5-வது பந்து வீச்சாளராகவும் இருப்பார். இதன் மூலம், கூடுதலாக ஒரு ஆல்ரவுண் டரைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அணி நிர்வாகத்துக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பின்னி, 3 டெஸ்ட்களில் விளையாடி னார். அவர் விக்கெட் ஏதும் கைப் பற்றாதபோதும், அறிமுக டெஸ்டில் 78 ரன்கள் எடுத்து, போட்டியை டிரா செய்ய உதவினார்.

தவண் விலகியுள்ள நிலையில், இந்திய அணிக்கு மேலும் பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடவில்லை. 2-வது டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் ஆடும் 11 பேர் அணியில் அவர் இடம்பெறுவாரா என்பதை அறிவிக்க முடியும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய அணிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. கொழும்பு மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பின்னி அணியில் சேர்க்கப்படு வதற்கு வாய்ப்பு அதிகம். சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சொல்லிக்கொள்ளும்படியாக பந்து வீசவில்லை. எனவே, அவர் 2-வது டெஸ்டில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் பின்னி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரும்பும் வரலாறு

ஸ்டூவர்ட் பின்னி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளது சுவாரசிய வரலாற்றை நினைவு படுத்துவதாக உள்ளது. ஸ்டூவர்ட் பின்னியின் தந்தை ரோஜர் பின்னியும், 1985-ம் ஆண்டு அணியில் ஒரு கூடுதல் வீரராகவே சேர்க்கப்பட்டார். அதுவும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான். குறிப்பாக, முதல் டெஸ்ட் முடிந்த பிறகு 2-வது டெஸ்ட்டுக்கு முன்னதாக. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மகனும் தந்தையைப் போலவே டெஸ்ட் அணியில் கூடுதல் வீரராக இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT