விளையாட்டு

கே.எல்.ராகுல் மீது சுமையை ஏற்றக்கூடாது; அவர் பேட்டிங் போய்விடும்: முகமது கைஃப் கருத்து 

செய்திப்பிரிவு

இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மெனாக திகழும் கர்நாடகாவைச் சேர்ந்த கே.எல். ராகுலை மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர் மீது கூடுதல் சுமையை ஏற்றினால் அவர் பேட்டிங் பாதிக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகமது கைஃப் தெரிவிக்கும் போது, “லோகேஷ் ராகுல் பிரதான விக்கெட் கீப்பராகச் செயல் பட வேண்டும் என்று கருதுகின்றனர் ஆனால் இது அவருக்குக் கூடுதல் சுமையாகி விடும்.

மற்று விக்கெட் கீப்பராக சாதுரியமாகப் பயன்படுத்தினால் அவரது பேட்டிங் பாதிக்காது. 20-20 உலகக்கோப்பைக்கு தோனி கட்டாயம் தேவை. இவர் தேர்வு செய்யப்படாவிடில் அது தவறான முடிவாகிவிடும்.

இக்கட்டான நேரத்தில் தோனிதான் சரியான வீரர். எந்த ஒரு வீரருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம், இது தற்போது தோனிக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT