பேட்மிண்டன் உலக தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்துள்ளார் இந்திய நட்ச்த்திரம் சாய்னா நெவால்.
ஜகார்த்தாவில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கரோலினாவிடம் தோல்வியடைந்ததையடுத்து ஸ்பெயின் வீராங்கனை முதலிடம் சென்றார்.
ஆனால் இன்று மீண்டும் சாய்னா நெவால் முதலிடம் பெற, கரோலினா 2-வது இடத்திலும், சீன தைபே வீராங்கனை டய் ட்சூ யிங் 3-ம் இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் ஒற்றையரில் பாருபள்ளி ஸ்வரூப் 2 இடங்கள் முன்னேறி 8-ம் இடத்திலும், இரட்டையர் மகளிர் பிரிவில் ஜ்வாலா குட்டா, அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் டாப் 10-ல் நுழைந்தனர்.
கிடாம்பி ஸ்ரீகாந்த் ஒரு இடம் பின்னடைந்து 4-ம் இடத்திலும், பி.வி.சிந்து ஒரு இடம் பின்னடைவு கண்டு 14-ம் இடத்திலும் உள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் 25 இடங்களில் இந்திய இணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.