விளையாட்டு

உ.கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் மந்தமாகக் கட்டை போட்டு ஆடினார், ஆனால் 39 வயதானாலும் அவரால் பங்களிப்பு செய்ய முடியும்: தோனி பற்றி நாசர் ஹுசைன் முரண்

செய்திப்பிரிவு

தலைமுறையில் ஒரு முறை மட்டுமே தோன்றும் வீரர் தோனி என்றும் அவரால் 39 வயதிலும் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் கூட பங்களிப்பு செய்ய முடியும் என்கிறார் நாசர் ஹுசைன்.

ஆனால் உலகக்கோப்பையில் இரு முறை அவர் கடைசியில் மந்தமாக ஆடிக் கட்டைப்போட்டார் என்று முரண்பட்ட இருகருத்துக்களை கூறியுள்ளார் நாசர் ஹுசைன்

ஓய்வும் பெறாமல் பிசிசிஐக்கு எந்த தகவலும் அளிக்காமல் பிடிவாதமாக இருந்து வரும் தோனி யாரிடமும் சொல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவார் என்று சுனில் கவாஸ்கர் சொன்னதுதான் சரி.

நாசர் ஹுசைனோ, “தோனி ஓய்வு பெற்றார் என்றால் அவரை மீண்டும் கொண்டு வர முடியாது. கிரிக்கெட்டில் சில லெஜண்ட்கள் உண்டு, தலைமுறைக்கு இவரைப்போன்ற ஒருவர்தான் வருவார்கள், அவரை விரைவில் ஓய்வுபெற வைத்து விடாதீர்கள். தோனி என்ன நினைக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்”

தோனியால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? அதுதானே உங்கள் கேள்வி நான் பார்த்தவரையில் தோனி பெரிய அளவில் இன்னமும் கூட பங்களிப்பு செய்ய முடியும் என்றே கருதுகிறேன்.

ஆம் அவர் ரன் விரட்டலில் ஓரிரு தருணங்களில் தவறான முடிவெடுத்து மட்டைப் போட்டு ஆடினார், இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில் இருமுறை அவர் மட்டைப் போட்டு ஆடினார். ஆனால் தோனி இன்னமும் திறமைசாலிதான் என்றார்.

SCROLL FOR NEXT