2018-19-ல் ஸ்மித், வார்னர் இல்லாத பந்து சேத சாண்ட்பேப்பர் சர்ச்சையில் நிலைகுலைந்த ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோலி அங்கு சென்று ஆடிய டெஸ்ட் தொடரில் பாடம் கற்பித்து 2-1 என்று தொடரை இந்தியாவுக்கு மட்டுமல்லாது, துணைக்கண்டம் முழுதுக்குமே வென்று காட்டினார்.
ஜஸ்டின் லாங்கர் மே 2018-ல் சாண்ட் பேப்பர் மோசடிக்குப் பிறகு லீமேனுக்கு அடுத்ததாக ஆஸி. பயிற்சியாளரானார். ஏகப்பட்ட கெடுபிடிகளை அணியில் புகுத்தினார்.
இந்தத் தோல்வியை தான் 2001-ல் ஆஷஸ் தொடருக்கு அணியிலிருந்து நீக்கப்பட்டபோது ஏற்பட்ட மன உணர்வை ஒத்தது என்றார்.
“இந்திய அணியிடம் டெஸ்ட்டில் தோற்றது எனக்கு விடுக்கப்பட்ட பெரிய எச்சரிக்கை மணி. என் வாழ்நாலில் கடினமான காலக்கட்டம். பயிற்சியாளராக என்னுடைய வளர்ச்சிக்காலகட்டமாகும் இது.
2001-ல் 31 வயதில் ஆஸ்டிரேலிய அணியிலிருந்து ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டேன், அப்போது முடிவு நெருங்கி விட்டது என்று நினைத்தேன். அதுதான் என்னை கிரிக்கெட் வீரனாகவும் மனிதனாகவும் வளர்த்தெடுக்க உதவிய தருணமாகும். நமக்கு தீமை நடக்கும் போதுதான் நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
தீமையை நாம் ஒழுங்காகப் புரிந்து கொணடோமானால் அது நம்மை நல்ல மனிதர்களாக மாற்றும்” என்றார்.
23 டெஸ்ட் சதங்களில் லாங்கர் 16 சதங்களை தொடக்க வீரராகவே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இவர், ஹெய்டன், ரிக்கி பாண்டிங் ஆகியோரை மே.இ.தீவுகளின் கிரீனிட்ஜ், பிரெட்ரிக்ஸ், ரிச்சர்ட்ஸ் போன்ற அதிரடி அச்சுறுத்தல் வீரர்கள் என்றே அவர்கள் காலத்தில் வர்ணிக்கப்பட்டனர்.