கடந்த சில ஆண்டுகளாக பிரமாதமாக வீசி வரும் ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன், இந்திய ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி இன்று உலகின் முன்னிலை ஆஃப் ஸ்பின்னராகத் திகழ்கிறார் என்று ஆஸி. இடது கை சைனமன் பவுலர் பிராட் ஹாக் புகழ்ந்துள்ளார்.
“ஆம் உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் என்ற தகுதியை அஸ்வினிடமிருந்து தனதாக்கிக் கொண்டார் நேதன் லயன், ஆனால் இருவரும் மேம்பாட்டுக்காக பாடுபடும் வழியை நான் பாராட்டுகிறேன்.” என்றார்.
அஸ்வின் பெரும்பாலும் ஸ்பின் ஆட்டக்களங்களில், பெரும்பாலும் இந்தியக் குழிபிட்ச்களில் வீசி 71 டெஸ்ட்களில் 365 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். நேதன் லயன் பெரும்பாலும் ஸ்பின்னுக்கு ஆதரவற்ற ஆட்டக்களங்களில் வீசி 96 டெஸ்ட் போட்டிகளில் 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அயல்நாடுகளில் அஸ்வின் சிறப்பாக வீசினாலும் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிவதில்லை, சமீபகாலமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அஸ்வின் துணை பவுலராகத்தான் செயல் பட நேரிடுகிறது என்பதும் ஒரு காரணம்.
ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளில் அஸ்வினை நேதன் லயன் அடித்துக் கொள்ள முடியாது.