420க்கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் மொத்தம் 5 பேர்தான். இதில் இருவர் டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை, ஒருவர் இன்னமும் ஓய்வு அறிவிக்கவில்லை.
இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேசப் போட்டிகள் விளையாடி முன்னிலை வகிக்கிறார். மொத்தம் 34, 357 ரன்கள் 48.52 என்ற சாராசரி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் சர்வதேச போட்டிகள், ஒரேயொரு டி20 சர்வதேசப் போட்டியில் ஆடியுள்ளார் சச்சின்.
அவரை விட்டால் அடுத்த இடத்தில் மகேந்திர சிங் தோனி இவர் 538 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 44.26 என்ற சராசரியில் 17,266 ரன்கள் எடுத்துள்ளார். தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்கள் 38.1 என்ற சராசரி, அதிகபட்ச ஸ்கோர் 224 (ஆஸி.க்கு எதிராக சென்னையில் எடுத்தது)
தோனி 350 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10,783 ரன்கள் 183 நாட் அவுட் அதிகபட்ச ஸ்கோர் சராசரி 50.6. 98 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1617 ரன்கள் 37.6 என்ற சராசரி.
ராகுல் திராவிட் 3வது இடத்தில் 509 சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 24,208 ரன்கள் சராசரி 45.41. இதில் டெஸ்ட் போட்டிகளில் 164 போட்டிகளில் 13,288 ரன்கள் 52.3 என்ற சராசரி. 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்துள்ள வீரர் ஓய்வு பெற்றது ஆச்சரியமே. அதுவும் பிரியாவிடை பந்தாவெல்லாம் இல்லாமல் ஓய்வு பெற்றிருக்கிறார்.
அடுத்ததாக அசாருதீன் 433 சர்வதேச போட்டிகளில் ஆடி 15,593 ரன்களை 39.77 என்ற சராசரியில் எடுத்துளார்.
அடுத்த இடத்தில் கங்குலி 424 போட்டிகளில் 18,575 ரன்களை 41.46 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் டி20 சர்வதேசத்தில் ஆடாதது கங்குலி, அசார் மட்டுமே.
இந்த 5 வீரர்களில் இன்னமும் ஓய்வு அறிவிக்காதது தோனி மட்டுமே.