விளையாட்டு

வெடிவெடிக்கும் நேரமல்ல என்று கூறிய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானை அவர் சார்ந்த வகுப்பைச் சுட்டிக்காட்டி  சாடிய நெட்டிசன்கள்

ஐஏஎன்எஸ்

ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து தீபங்கள் ஏற்றுமாறு பிரதமர் கூறியதற்கு பலதரப்புகளிலிருந்து ஆதரவுக்குரல்கள் கிடைத்தாலும் அந்தத் தருணத்தை வெடிவெடித்துக் கொண்டாடியதை இந்திய கிரிக்கெட் வீரர்களில் பலர் விரும்பவில்லை.

ட்விட்டர் பக்கத்தில் இர்பான் பதான், “மக்கள் வெடிவெடிக்கும் வரை அது நன்றாகத்தான் இருந்தது” என்று கூறியிருந்தார்.

இதற்குக் கடுப்பான மக்கள் அவரைப் பெயரைக் குறிப்பிட்டு, அவரது மதத்தைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஆனால் இர்பான் பதான் கலக்கமடையவில்லை, “நமக்கு தீயணைப்பு லாரிகள் தேவை, நீங்கள் உதவ முடியுமா?” என்று அதற்குப் பதிலடி கொடுத்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடப்பு பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், “உள்ளுக்குள் இருங்கள், நாம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்தான் இருக்கிறோம், வெடிவெடிக்க இது நேரமல்ல” என்று பதிவிட்டார்.

ஹர்பஜன் சிங் ஒரு படி மேலே போய் ‘கரோனாவுக்கு வைத்தியம் உண்டு, முட்டாள்தனத்துக்கு வைத்தியம் உண்டா?” என்று ஒரே போடாகப் போட்டார்,

இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதானை அவர் சார்ந்த பிரிவை குறிப்பிட்டு கோபத்தை வெளிப்படுத்திய நெட்டிசன்கள் விவகாரம் வீரர்களிடையே கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT