4 நாள் போட்டி ஒன்றில் ஆக்ரோஷமான தனது ஆட்டம் குறித்து ராகுல் திராவிட் தன்னை லேசாகக் கடிந்து கொண்டது பற்றி ஷ்ரேயஸ் அய்யர் தற்போது பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு ஷ்ரேயஸ் அய்யர் அது தொடர்பாகக் கூறியதாவது:
அது ஒரு 4 நாள் மேட்ச், ராகுல் திராவிட் என் ஆட்டத்தை முதல் முறையாகப் பார்க்கிறார். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஒவர் நான் 30 ரன்கள் பக்கத்தில் பேட் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது கடைசி ஓவர் தடுத்தாடி ஓவரைக் கடத்தி விடுவார் என்றே அனைவரும் கருதினர், ராகுல் திராவிட் சார் பார்த்துக் கொண்டிருந்தார், நான் மேலே தூக்கி வீசப்பட்ட பிளைட்டட் பந்து ஒன்றை மேலேறி வந்து தூக்கி அடித்தேன் அது காற்றில் மேலே எழும்பி சிக்சருக்குச் சென்றது. ஓய்வறையில் அனைவரும் எழுந்து ஓடி வந்தனர், கடைசி ஓவரை இப்படி ஆடுவது யார் என்று அவர்களுக்கு ஆச்சரியம்.
இந்த நாளில்தன திராவிட் சார் நான் எப்படி என்பதை பார்த்திருப்பார். அவர் ஆட்டம் முடிந்த பிறகு என்னிடம் வந்து ‘பாஸ்! என்ன இது?’ கடைசி ஓவர் இப்படி ஆடலாமா என்றார். பின்னால்தான் எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிந்தது.
பிற்பாடு மாற்றிக் கொண்டேன் ஆனால் ஷாட்கள் ஆடும்போது நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும், அந்தக் கட்டத்தில் பாசிட்டிவ் ஆக ஆட வேண்டும், பொதுவாக என்னை சோம்பேறி, மந்தமாக ஆடக்கூடியவர் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் எனக்கு பிடித்த வழியில் நான்பேட் செய்வதில்தான் எனக்கு எப்போதுமே விருப்பம்.
இவ்வாறு கூறினார் ஷ்ரேயஸ் அய்யர்.