விளையாட்டு

பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் கரோனா வைரஸ் நிவாரணத்துக்கு பெரிய அளவில் நன்கொடை

செய்திப்பிரிவு

பிரேசில் கால்பந்து நட்சத்திரமும் பாரிஸ் செயிண்ட் - ஜெர்மெய்ன் வீரருமான நெய்மர் கரோனா வைரஸை எதிர்கொள்ள 10 லட்சம் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார்.

இந்த நன்கொடை ஐநா குழந்தைகள் நல நிதி (யூனிசெப்) மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பாரது விழிப்புணர்வு அறக்கட்டளை இரண்டுக்கும் செல்கிறது.

நெய்மர் உலகிலேயே அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் முன்னிலை வகிப்பவர். மாதம் ஒன்றுக்கு நெய்மரின் சம்பளம் எத்தனை தெரியுமா? 3.2 மில்லியன் டாலர்களாகும்.

இதனை அவர் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியிலேயே சம்பாதித்து விடுகிறார்.

பிரேசில் அதிபர் லாக்-டவுன், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை அதிகமாக விமர்சித்து மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பிரேசிலில் சுமார் 9,000 பேருக்கும் அதிகமாக கரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெள்ளியிரவு தெரிவித்தது

SCROLL FOR NEXT