இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-வது சீசனில் மும்பை சிட்டி எப்.சி. அணிக்காக களமிறங்குகிறார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி.
அது தொடர்பாக மும்பை அணியின் நட்சத்திர வீரரும், பயிற்சியாளருமான நிகோலஸ் அனெல்கா கூறியதாவது: சுனில் சேத்ரி மிகச்சிறந்த வீரர் என எல் லோரும் என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர் விளையாடி நான் பார்த்ததில்லை. அவரிடம் பேசுவதற்கு முயற்சிப்பேன்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடவிருப்பதன் காரண மாக ஐஎஸ்எல் போட்டியின் ஆரம் பத்தில் ஒரு சில ஆட்டங்களில் சேத்ரி விளையாடமாட்டார். அவர் எங்கள் அணியில் இடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய வருகை எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என நினைக்கிறேன்” என்றார்.
2-வது சீசன் குறித்துப் பேசிய அனெல்கா, “இந்த முறை தலைசிறந்த அணியைப் பெற்றிருக்கிறோம். கடந்த முறை யும் எங்கள் அணி நல்ல அணிதான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக முன்னணி வீரர்கள் காயமடைந்துவிட்டனர். கடந்த சீசனைவிட இந்த சீசனில் சிறப்பாக ஆட வீரர்கள் விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பது எனது விருப்பம்” என்றார்.