விளையாட்டு

கரோனா வைரஸ்: மிகப்பெரிய  தொகையை நன்கொடையாக அளித்த டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்புக்காக செர்பியா நாட்டுக்கு வென் ட்டிலேட்டர்கள் வாங்கவும் மருத்துவ உபகரணங்களைப் பெறவும் அந்நாட்டு டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் 1.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.

அதாவது இந்திய ரூபாய்களின் மதிப்பில் இது சுமார் ரூ.8.30 கோடியாகும். செர்பியாவில் இதுவரை 528 பாசிட்டிவ் கரோனா கேஸ்கள் உள்ளன, உலக அளவில் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோவக் ஜோகோவிச் அறக்கட்டளையின் இயக்குநரான அவர் மனைவி ஜெலெனா வென்ட்டிலேட்டர்கள் 18,000 டாலர்கள் முதல் 90,000 டாலர்கள் வரை ஆகும்.

நோவக் ஜோகோவிச் கூறும்போது, “கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவ வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக அதிகம் பேர் தினசரி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே நானும் என் மனைவியும் எங்களிடம் உள்ள ஆதாரங்களை எந்த வழியில் நன்கொடையாக செலுத்தலாம் என்று திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

சுவிட்சர்லாந்து நட்சத்திரம் ரோஜர் பெடரர் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக 1.7 மில்லியன் டாலர்கள் (ரூ.7 கோடி) தொகையை நன்கொடையாக அறிவித்தார்.

ரஃபேல் நடால் கரோனா நிவாரணத்துக்காக ரூ.91 கோடி திரட்ட சக விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT