விளையாட்டு

இப்போதைய ஊரடங்கு உத்தரவை பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்தாரா ஜோஃப்ரா ஆர்ச்சர்? - வைரலாகும் பழைய ட்வீட்கள்

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் சற்று வித்தியாசமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் மூன்று வருடங்களுக்கு முந்தைய ட்வீட்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ச்சர் பதிவிட்ட ஒரு ட்வீட்டில் ‘3 வாரங்கள் வீட்டில் இருப்பது போதாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT