விளையாட்டு

கரோனா வைரஸ்- மக்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் ட்ரைவர் ஆன இத்தாலி ரக்பி வீரர்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று சீனாவுக்குப் பிறகு பெரிய அளவில் பாதித்து பலி எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது இத்தாலியில்தான், என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது இத்தாலி.

இந்நிலையில் இத்தாலியின் பிரபல ரக்பி வீரர் மாக்சிம் மபாண்டா கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலையடுத்து உலகில் பல விளையாட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் சும்மா வீட்டில் அடைந்து கிடப்பதை விடுத்து 26 வயது ரக்பி வீரர் மாக்சிம் மபாண்டா ஆம்புலன்ஸ் ட்ரைவராக மாறியுள்ளது பலரையும் பாராட்டச் செய்துள்ளது.

“மருத்துவத் துறையை சேர்ந்தவர் அல்லாத போதிலும் அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தேன். இதையடுத்து முதியவர்களுகுத் தேவையான மருந்துப் பொருட்கள், உணவுப்பொருட்களைக் கொண்டு சேர்க்க முடிவெடுத்து இந்தப் பணியில் இறங்கியுள்ளேன்” என்றார்.

நம் நாட்டு பணம் கொழிக்கும் கிரிக்கெட் வீரர்களும் நடிகர்களும் இதனைப் பின்பற்றலாமே?!

SCROLL FOR NEXT