சையத் முஷ்டாக் அலி என்ற முன்னாள் இந்திய வீரர் 1930-31 முதல் 1964 வரை பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார் நாட்டுக்காக 1934 முதல் 1952 வரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்.
11 டெஸ்ட் போட்டிகளில் சையத் முஷ்டாக் அலி 2 சதங்கள் 3 அரைசதங்களுடன் 612 ரன்களை எடுத்துள்ளார் அதிகபட்ச ஸ்கோர் 112 ஆகும், முதல் தர கிரிக்கெட்டில் 226 போட்டிகளில் 13,213 ரன்களை 30 சதங்கள் 63 அரைசதங்களை எடுத்துள்ளார். மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் ஆவார் இவர்.
இவரை கவுரவுக்கும் விதமாக சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடர் என்ற உள்நாட்டு தொடர் இந்தியாவில் பிசிசிஐ-யினால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்தி வைப்பு, போட்டிகள் குறைப்பு., ஐபில் தரம் பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆட்டங்களின் தரம் மோசமானதாக இருக்க் கூடாது, தரநிலைகளை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டியுள்ளது. இன்னொரு முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடராக இது அமைவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியதாக எழுந்த செய்திகளை அடுத்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வேதனை தெரிவித்தார்.
தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் எழுதிய பத்தி ஒன்றில் இது தொடர்பாக அவர் கூறியதாவது: “இப்படிக் கூறுவது மிகவும் உணர்வற்ற ஒரு கூற்றாகும். முதலில் சையத் முஷ்டாக் அலி என்ற கிரிக்கெட் வீரர் ஒரு கிரேட் மேன், அவர் பெயரில் நடக்கும் தொடரை இவ்வாறு மோசம் என்று கூறுவது அவருக்கு இழைக்கப்படும் அவமரியாதையாகும்.
இரண்டாவது கேள்வி அவ்வளவு, ‘மோசமான’ தொடர் என்றால் ஏன் அதை நடத்த வேண்டும்? மேலும் ஏன் அந்த தொடரின் தரம் மோசமானதாக இருக்க வேண்டும் என்பதையும் பிசிசிஐ விளக்க வேண்டும். நிச்சயம் சர்வதேச வீரர்கள் இதில் இல்லை என்பதனால் அல்ல, மாறாக இந்திய சர்வதேச வீரர்கள் கூட இதில் ஆடுவதில்லை என்பதுதான், இது ஷெட்யூல் விவகாரமாகக் கூட இருக்கலாம் இதை பிசிசிஐ கவனமேற்கொள்ள வேண்டும்” என்றார் சுனில் கவாஸ்கர்.