விளையாட்டு

ஐபிஎல் தொடருக்காக மனித உயிர்களை பலி கொடுக்க முடியாது, பாதுகாப்புதான் முக்கியம் : கிங்ஸ் லெவன் உரிமையாளர் நெஸ் வாடியா 

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தாக்கம் குறித்து எந்த ஒரு கணிப்பும் சாத்தியமில்லாததால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைத்தது பிசிசிஐ.

இந்நிலையில் சனிக்கிழமையன்று ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சந்திப்பும் நடைபெற்று வருகிறது. இதில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா, “ரசிகர்கள், வீரர்கள் பாதுகாப்புத்தான் முக்கியம், இதில் சமரசம் கூடாது. ஐபிஎல்-ஐ ஒத்தி வைத்து பிசிசிஐ சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. போயும் போயும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக மனித உயிரை பலி கொடுக்க முடியாது.

அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, இன்னும் 2 வாரங்கள் காத்திருந்து முடிவெடுப்பதில் ஒரு தவறும் இல்லை, மனித உயிர்கள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது.

வருத்தம் தெரிவிப்பதை விட முன்னெச்சரிக்கை அறிவுபூர்வமானது. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏப்ரல் இறுதிக்கெடு வரையும் நிலைமைகள் முன்னேறவில்லையெனில் கடினமான முடிவை எடுக்க வேண்டி வரலாம்” என்று ஐபிஎல் கிரிக்கெட்டை இந்த ஆண்டு ரத்து செய்யும் கடினமான முடிவை எடுப்பது பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சக உரிமையாளர் நெஸ் வாடியா.

SCROLL FOR NEXT