இலங்கை வாரியத் தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை கலங்கடித்து வருகிறார்.
இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று நாள் பயிற்சி ஆட்டமாக இலங்கை வாரியத் தலைவர் அணியுடன் ஆடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் 351 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.
2-வது நாளான இன்று தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு பெரிய சவாலாக மாறியது.
தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் இலங்கையை திக்குமுக்காடச் செய்தார். தற்போது உணவு இடைவேளையில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை வாரியத் தலைவர் அணி இழந்துள்ளது.
இதுவரை மொத்தம் 4 ஓவர்களை மட்டுமே வீசியுள்ள இஷாந்த் சர்மா 5 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.