மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 41-வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த முன்னாள் உடற்கல்வி ஆசிரியரான கே.அரங்கசாமி பங்கேற்றார்.
இந்தத் தொடரில் 80 முதல் 84 வயதுக்கு உட்பட்டோருக்கான ஈட்டி எறிதலில் கே.அரங்கசாமி 19.62 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டம், 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள அரங்கசாமி ஏற்கெனவே பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று இதுவரை40 பதக்கங்கள் வென்றுள்ளார்.