விளையாட்டு

போராட்ட இந்திய மகளிர் டி20 அணிக்கு  சச்சின், கங்குலி உருக்கமான ஆறுதல் ட்வீட்

செய்திப்பிரிவு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 85 ரன்களில் மிகப்பெரிய தோல்வி அடைந்து ரன்னர் கோப்பையை மட்டுமே வெல்ல முடிந்தது.

இதனால் மகளிர் அணி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது, இரு முறை உ.கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்து வெல்ல முடியாமல் போய்விட்டது.

இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா, இந்தியா, இரு அணிகளையும் இறுதிக்குள் நுழைந்த விதம் குறித்து பாராட்டி இந்திய அணிக்கு உற்சாகமூட்டும் ஆறுதல் ட்வீட் செய்துள்ளார்.

“உலகக்கோப்பை டி20-யை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணிக்குப் பாராட்டுக்கள். டீம் இந்தியாவுக்கு கடினமான நாளாக அமைந்தது. நம் அணி இளம் அணி, நிச்சயமாக திடமான ஒரு அணியாக உருவெடுக்கும். உலகம் நெடுகிலும் பலரையும் நீங்கள் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். உங்களை நினைத்துப் பெருமையடைகிறோம். கடினமாக உழையுங்கள், நம்பிக்கை இழந்து விடாதீர்கள்..ஒரு நாள் அது நிகழும்” என்று சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி தன் ட்வீட்டில், “வெல் டன் மகளிர் கிரிக்கெட் அணி. இரண்டு அடுத்தடுத்த உலகக்கோப்பை இறுதிகள், ஆனால் தோல்வியடைந்து விட்டோம். ஒருநாள் நிச்சயம் அந்த இடத்திற்கு உயர்வோம். வீரர்களையும் அணியையும் நேசிக்கிறோம்” என்று கங்குலி ஆற்றுப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT