விளையாட்டு

கும்ப்ளே கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அதையும் தாண்டிய  ‘பெரிய மூளைக்காரர்’- ரோட்ஸ் புகழாரம்

செய்திப்பிரிவு

வரவிருக்கும் ஐபிஎல் 2020 தொடரில் கிங்ஸ் லெவன் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, பீல்டிங் பயிற்சியாளர் ஜான்ட்டி ரோட்ஸ். இந்த இரண்டு ஆளுமைகளின் சேர்க்கை கிங்ஸ் லெவன் அணிக்கு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தருமா என்பது இந்த ஐபிஎல்-ன் சுவாரசியமாகும்.

இந்நிலையில் கும்ப்ளேயுடன் சேர்ந்து பணியாற்றும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ஜான்ட்டி ரோட்ஸ் கூறியதாவது, “கும்ப்ளேயினால்தான் நான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பீல்டிங் கோச் பொறுப்பை ஏற்றேன்.

டாப் லெவல் கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டியவர் அனில் கும்ப்ளே. உண்மையில் கிரிக்கெட்டையும் தாண்டிய மூளைக்காரர். ஆம்! ஒரு அணியின் தலைமைப் பயிற்சியாளார் என்றால் இவரைப்போன்ற திறமையுடையவர் அவசியம். இந்தப் பொறுப்புக்கு வெறும் கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டிய மூளை வேண்டும் அது கும்ப்ளேயிடம் எக்கச்சக்கமாக உள்ளது.”

இவ்வாறு கூறினார் ஜான்ட்டி ரோட்ஸ். அயல்நாட்டினரும் புகழும் இத்தகைய ஒரு பயிற்சியாளரைத்தான் விராட் கோலி தினமும் பிசிசிஐ உச்ச நீதிமன்றம் நியமித்த வினோத் ராய் உறுப்பினராக இருந்த குழுவிடம் நீக்குமாறு தொடர் குறுஞ்செய்திகளை அனுப்பி வெளியேற்றினார் என்பதையும் நாம் மறக்கலாகாது.

SCROLL FOR NEXT