திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோப்பையை வென்ற கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி அணியினர். 
விளையாட்டு

மாநில கூடைப்பந்து போட்டியில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி சாம்பியன்

செய்திப்பிரிவு

கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான பிஷப் சாலமன் துரைசாமி நினைவுக் கோப்பை கூடைப்பந்து போட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்று வந்தது. 12 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் சுற்றுகளின் முடிவு அடிப்படையில் 4 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தேர்வாகின.

இதில்கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அணி 86-73 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் ஜி.டி.என் கலை கல்லூரி அணியையும், 79-65 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியையும், 66-51 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியையும் வென்று முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணி இரண்டாமிடம், திண்டுக்கல் ஜி.டி.என் கலை கல்லூரி அணி மூன்றாமிடம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி நான்காமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளின் வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகளப் பயிற்சியாளர் ஆர்.சீனிவாசன் பரிசு வழங்கினார். பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி.பால் தயாபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT