பாகிஸ்தானில் நடக்கவிருந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்திய அணி பாதுகாப்புக் காரணமாக பாகிஸ்தான் செல்ல முடியாத காரணத்தினால் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நடைபெறும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் தான் நடத்துகிறது, அதில் மாற்றமில்லை, ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என்று மறுத்ததால் போட்டித் தொடர் வேறு வழியின்றி துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
2012-13-க்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடரில் பரஸ்பரம் எதிர்த்து ஆடியதில்லை.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாகவும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல்கள் இருந்து வருவதால் இந்திய அணி எந்த ஒரு விளையாட்டு அணியையும் பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை, முக்கியமான ஐசிசி தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலை மைதானங்களிலேயே ஆடி வருவது குறிப்பிடத்தக்கது