விளையாட்டு

டி20 தரவரிசை: அசைக்க முடியாத இடத்தில் பாபர் ஆஸம், ரஷீத் கான்- கோலி, பும்ரா நிலை என்ன?

பிடிஐ

ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கே.எல்.ராகுல் 2வது இடத்தைத் தக்க வைக்க கோலி 9ம் இடத்தில் நீடிக்கிறார்.

ஆனால் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து 879 புள்ளிகளுடன் நீடித்து வருகிறார். நியூஸிலாந்துக்கு எதிரான 5-0 ஒயிட்வாஷ் வெற்றியில் ராகுல் 224 ரன்களை 2 அரைசதங்களுடன் எடுத்து 823 புள்ளிகளுடன் 2ம் இடத்தைத் தக்க வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஏரோன் பிஞ்ச் 820 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருக்கிறார். நியூஸிலாந்தின் அதிரடி தொடக்க வீரர் கோலின் மன்ரோ 785 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 721 புள்ளிகளுடன் பேட்டிங் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ளனர்.

கேப்டன் விராட் கோலி 673 புள்ளிகளுடன் தொடர்ந்து 9ம் இடத்தில் நீடிக்கிறார். 662 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 11ம் இடத்தில் இருக்கிறார். டேவிட் வார்னர் 18வது இடத்திலும் ஸ்டீவ் ஸ்மித் 25 இடங்கள் முன்னேறி 53வது இடத்திலும் உள்ளனர்.

பவுலிங் தரவரிசையில் பும்ரா 12வது இடத்தில் இருக்கிறார், ஆப்கானின் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். ஆப்கானின் இன்னொரு ஸ்பின்னர் முஜிபுர் ரஹ்மான் 2ம் இடத்தில் நீடிக்கிறார். சமீபத்திய நாயகனான ஜடேஜாவின் விசிறி ஆஷ்டன் ஆகர் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆடம் ஸாம்ப்பா 3வது இடத்திலும் தென் ஆப்பிரிக்க ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்ஸி 5ம் இடத்திலும் உள்ளனர்.

SCROLL FOR NEXT