இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் லெவனில் இடம்பெறாததால் எனக்கு பிரச்சினையும் இல்லை. இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண் டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆனால் அந்தத் தொடரில் பாகிஸ் தானின் முன்னணி பேட்ஸ்மே னான சர்ஃப்ராஸ் அஹமது இடம் பெற்றிருந்தபோதும் ஆடும் லெவ னில் சேர்க்கப்படவில்லை.
இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சர்ஃப்ராஸ் அஹமதுவை சேர்க்கா தது ஏன் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கேள்வியெழுப்பியுள்ளனர். இது தொடர்பாக டி20 கேப்டன் அப்ரிதியிடமும், பயிற்சியாளர் வக்கார் யூனிஸிடமும் விளக்கம் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை தொடரை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பிய சர்ஃப்ராஸ் அஹமதுவிடம் இது தொடர்பாக கேட்டபோது, “இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம். பாகிஸ்தான் டி20 தொடரை வென்றதும், சர்வதேச தரவரிசையில் முன்னேற்றம் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அணியின் தேவை கருதியே எனக்கு ஓய்வளிக்கப் பட்டது. அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எப்போது விளையாடினாலும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதுதான் எனது பணி. எப்போதுமே அதை செய்வதற்கு நான் முயற்சிப்பேன்” என்றார்.