சாக் ஷி மாலிக் 
விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்றார் சாக் ஷி மாலிக்: வினேஷ் போகத்துக்கு வெண்கலப் பதக்கம்

செய்திப்பிரிவு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாக் ஷி மாலிக்வெள்ளிப் பதக்கமும், வினேஷ் போகத் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

டெல்லியில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சாக் ஷி மாலிக் இறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ருகியை எதிர்த்து விளையாடினார். இதில்சாக் ஷி மாலிக் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

53 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் மயூமுகைதாவை எதிர்த்து மோதினார். இதில் வினேஷ் போகத் 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் வெண்லகப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் வினேஷ் போகத்.

இதில் வியட்நாமின் தி லி கியுவை 0-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார் வினேஷ் போகத். 57 கிலோஎடைப் பிரிவில் இந்தியாவின் அன்ஷு 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சேவரா ஈஷ்முரடோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 72 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் குர்ஷரன் பிரீத் கவுர் 5-2 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஏக்பயாரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

அதேவேளையில் 62 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் சோனம் 0-11 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் ஐசுலுடைனிபெகோவாவிடம் தோல்வியடைந்தார்.

SCROLL FOR NEXT