ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் அணிகள் இன்று இரண்டாவது முறையாக மோத இருக்கின்றன.
மும்பையில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையே ஏற்கெனவே நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை 7 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. இனி பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிகளைக் குவித்தால் மட்டுமே மும்பை அணியால் அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும். எனவே அந்த அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டி.
கடந்த சில ஆட்டங்களில் மும்பை பேட்டிங் முன்னேற்றம் கண்டுள்ளது. அதுவும் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 187 ரன்கள் குவித்தனர். அதேபோல சென்னைக்கு எதிரான ஆட்டத்திலும் மும்பை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்லியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.