விளையாட்டு

இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்கள்: ரஹானே சாதனை; மேலும் சுவையான தகவல்கள்

பிடிஐ

இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்களைப் பிடித்த முதல் இந்திய பீல்டர் ஆனார் அஜிங்கிய ரஹானே.

ஆனால் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு தொடரில் 10 கேட்ச்களை அசாருதீனும் எடுத்துள்ளார், ஆனால் அது இந்தியாவில் 1993-94-ல் நடைபெற்ற தொடரின் போது என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் மிஸ்ரா 3-வது முறையாக ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா, வங்கதேசத்துக்கு எதிராக 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மிஸ்ரா.

இன்று அவர் கைப்பற்றிய 4/43 என்பது வெளிநாட்டில் அவரது சிறந்த பந்து வீச்சாகும். மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5/71 என்பதே அவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு.

15-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் மிஸ்ரா தனது 50வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார், அவர் தற்போது 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், சராசரி 38.19.

லாஹிரு திரிமானே (62) இந்தியாவுக்கு எதிராக எடுக்கும் முதல் அரைசதமாகும்.

மேத்யூஸ் (102) கேப்டனாக எடுக்கும் 5-வது சதமாகும். இந்தியாவுக்கு எதிராக முதல் சதம், அவரது 6-வது டெஸ்ட் சதமாகும் இது. டிசம்பர் 2009-ல் பிரபார்ன், மும்பையில் அவர் எடுத்த 99 ரன்களே இந்தியாவுக்கு எதிரான அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும்.

கேப்டனாக பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார் மேத்யூஸ். 20 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக மட்டுமே 1999 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 71.39 ஆகும்.

இலங்கையில் மேத்யூஸ் 2000 டெஸ்ட் ரன்களை பூர்த்தி செய்துள்ளார். 30 டெஸ்ட் போட்டிகளில் அங்கு அவர் 2037 ரன்களை 58.20 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 3 சதங்களும் 12 அரைசதங்களும் இதில் அடங்கும்.

SCROLL FOR NEXT