3வது ஒருநாள் போட்டியில் அகர்வால் கிளீன் பவுல்டு. 
விளையாட்டு

ஒரேயொரு சேவாக்தான் இருக்க முடியும்; நான் சேவாக் அல்ல: மயங்க் அகர்வால் 

செய்திப்பிரிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் தொழில்நேர்த்தியான ஒரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் தன்னுடைய ஆதர்ஸ வீரர் விரேந்திர சேவாக் என்று ஒருமுறை கூறினார்.

முதல் தர கிரிக்கெட், உள்நாட்டு ரஞ்சி ட்ராபிகள், உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 7 முறை 150+ ஸ்கோரை அவர் எடுத்துள்ளார். தற்போது நியூஸிலாந்தில் அவருக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்திருக்கின்றன.

ஏனெனில் ஒரு நாள் தொடரில் சொதப்பியதோடு, ஏ அணியின் பயிற்சி ஆட்டத்திலும், இன்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்திலும் சொதப்பியுள்ளார் மயங்க் அகர்வால்.

இந்நிலையில் நியூஸிலாந்தில் அவர் ஆடினால்தான் அவருடைய உத்தி மற்றும் பொறுமை, ஆட்ட நேர்த்தியின் உண்மையான தன்மை வெளிப்படும். அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு அளித்த நீண்ட பேட்டியில் உங்கள் ஆதர்சம் சேவாக் போல் நிறைய ஷாட் தெரிவுகள் இருந்தாலும் இப்போதெல்லாம் பொறுமை உங்களுக்கு அதிகமாக இருப்பது போல் தெரிகிறதே என்ற தொனியில் ஒரு கேள்வியை முன் வைக்க, அதற்கு மயங்க் அகர்வால் கூறியதாவது:

அதாவது ஒரேயொரு விரேந்திர சேவாக்தான் இருக்க முடியும் என்ற புரிதலோடு உங்கள் கேள்வி தொடர்புடையது, அல்லது விரேந்திர சேவாக் வித்தியாசமான ஒரு பிளேயர். அவரது ஆட்டமே ஒரு தனி ரகத்தைச் சேர்ந்தது.

நான் வித்தியாசமான வீரர், என்னுடைய ஆட்டம் வேறு மாதிரியானது. எனக்கும் சேவாகுக்கும் சில விஷயங்கள் ஒன்று போல் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய ஆட்டம் பற்றி எனக்கு நல்ல புரிதல் இருக்கிறது, எனவே எனக்கு எது சரியாக வருகிறதோ அதையே செய்ய முற்படுவேன். இதுதான் எனக்கு உதவுகிறது, என்றார் மயங்க் அகர்வால்.

SCROLL FOR NEXT