இந்தியா ஏ தொடரில் ஷுப்மன் கில் ஒரு சதம் மற்றும் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து பிரிதிவி ஷாவை விட ஷுப்மன் கில்தான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்க சரியான தெரிவு என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
16 மாதங்களுக்குப் பிறகு தொடக்க வீரராக மீண்டும் டெஸ்ட் அணிக்குள் பிரித்வி ஷா வந்துள்ளதையடுத்து மயங்க் அகர்வாலுடன் இறங்க யார் சரியான வீரர் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறும்போது, “ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், ஏனெனில் அவர் அணியில் தொடர்ந்து ரிசர்வ் தொடக்க வீரராக சில காலம் இருந்து வருகிறார், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஆடவில்லை.
மயங்க் அகர்வால் தன்னை டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்து விட்டார். இவர் தன் ஆட்டத்தை நன்கு புரிந்து கொண்டவர். 3 ஒரு நாள் போட்டிகளில் ரன் எடுக்காததை வைத்தும் பயிற்சி ஆட்டத்தையும் வைத்து அவரை எடை போட முடியாது. இது அப்படி வேலை செய்யாது.
எங்கு ஆடினாலும் மயங்க் ரன்களை குவித்து வருகிறார் எனவே முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும்” என்றார் ஹர்பஜன் சிங்.