சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் கோல்ஃப் விளையாட்டில் இந்திய வீரர் ரன்வீர் சிங் சைனி தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய கோல்ஃப் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
14 வயதான ரன்வீர், மோனிகா ஜஜூவுடன் இணைந்து 9 ஷாட்களை துல்லியமாக அடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். குர்காவ்னில் பிறந்தவரான ரன்வீர், தனது 2-வது வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டார். மனவளர்ச்சி குன்றிய அவரால் மற்றவர்களைப் போல் எளிதில் புரிந்து கொண்டு பேசவோ, உரையாடவோமுடியாது. தனது 9-வது வயதில் கோல்ஃப் விளையாட்டில் களமிறங்கிய ரன்வீர், 14-வது வயதில் வரலாறு படைத்திருக்கிறார்.