கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்தை வெல்ல ஸ்டீவ் ஸ்மித்தைக் காட்டிலும் ஒரேயொரு வாக்கு அதிகமாகப் பெற்று டேவிட் வார்னர் 3வது முறையாக ஆலன் பார்டர் பதக்கம் வென்றார்.
டேவிட் வார்னர் 194 வாக்குகள் பெற ஸ்டீவ் ஸ்மித் 193 வாக்குகளைப் பெற்றார், கடந்த ஆண்டின் வெற்றியாளர் பாட் கமின்ஸ் 185 புள்ளிகளை பெற்றார்.
புதிய நட்சத்திரமான மார்னஸ் லபுஷேன் ஆடவர் கிரிக்கெட் சிறந்த டெஸ்ட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். இதிலும் ஸ்டீவ் ஸ்மித் நெருக்கமாக 2ம் இடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டிகளுக்கான விருதை ஏரோன் பிஞ்ச் முதல் முறையாகத் தட்டிச் சென்றார். வார்னருக்கு இரட்டைப் பரிசாக டி20 சர்வதேச வீரர் விருதும் கிடைத்தது.
இதே ஆலன் பார்டர் பதக்கத்தை வார்னர் இதற்கு முன்பக 2016 மற்றும் 2017-ல் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் மட்டுமே இந்த மதிப்பு மிக்க பதக்கத்தை 4 முறை வென்றுள்ளனர்.