ஆக்லாந்தில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் ஷமி, குல்தீப் யாதவ் இல்லை, பதிலாக சைனி, சாஹல் சேர்க்கப்பட்டுள்ளனர், நியூஸிலாந்து அணியில் ஜேமிஸன் என்ற வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த போட்டியில் சாத்துமுறை வாங்கிய ஷர்துல் தாக்குர் அணியில், ஆனால் ஷமி இல்லை. இது என்ன செலெக்ஷன் பாலிசி என்பது கோலிக்கும் ரவிசாஸ்திரிக்குமே வெளிச்சம்.
மைதானம் சிறிய மைதானம் என்பதால் இலக்கை விரட்டுவது எளிது என்பதால் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததாக விராட் கோலி தெரிவித்தார்.
மைதானம் சிறிது என்பதால் இஷ் சோதி, சாண்ட்னர் ஆகிய 2 ஸ்பின்னர்களுமே நியூஸிலாந்து அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாகத்தான் ஜேமிசன், சாப்மேன் வந்துள்ளனர்.