மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011-ல் கபில்தேவுக்குப் பிறகு இந்திய அணி 2ம் முறையாக ஐசிசி உலகக்கோப்பையை வென்ற போது தொடர் நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் மூலம் தான் ஆடும்போதே உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற சச்சினின் தீராத தாகமும் தீர்ந்தது. யுவராஜ் சிங், சச்சினுக்காக 2011 உலகக்கோப்பையை வெல்ல வேண்டு என்று தொடர்ந்து கூறிவந்தார், அப்படியே நடந்தது.
இந்நிலையில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்குச் சாதகமாக பிட்ச் உள்ளிட்டவை அமைந்தாலும் அரையிறுதியில் நியூஸிலாந்து நிர்ணயித்த வெற்றி பெற கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் இந்தியா தோற்று வெளியேறியது.
இது தொடர்பாக, யுவராஜ் சிங் கூறும்போது, “அணியில் இருக்கும் திறமையான வீரர்களுக்கு உலகக்கோப்பையை வென்றிருக்க வேண்டும்.
ஆனால் 2019 உலகக்கோப்பை திட்டமிடுதல் ரொம்பவும் மோசம். அணி நிர்வாகம், தேர்வுக்குழு சில மோசமான முடிவுகளை எடுத்தனர்.. அதாவது உலகக்கோப்பைக்கு முன்பும், உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறும் போதும் மோசமான சில முடிவுகளை எடுத்தனர்.
அதுதான் தோல்விக்குக் காரணம். இப்போது சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருக்கிறார், நிச்சயம் அவர் அணிக்குத் தேவையான மூளையாகச் செயல்படுவார், நம் அணியில் திறமை இருக்கிறது, ஆனால் அதற்குத் தக்க யோசனைக் குழு வேண்டும். உலக்கோப்பை டி20யை வெல்ல நாம் தயாராகவே இருப்பதாக நம்புகிறேன்” என்றார்.
தவறவிடாதீர்!