விளையாட்டு

ஷா, அகர்வால், கேதார் ஜாதவ் அணியில்: இந்தியா முதலில் பேட்டிங்: பிட்ச் எப்படி?

செய்திப்பிரிவு

ஹேமில்டன் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளது.

இந்திய அணியில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், கேதார் ஜாதவ் வந்துள்ளனர். மணீஷ் பாண்டே டி20-யில்அரைசதம் மூலம் பார்முக்கு வந்தார், அவரை உட்கார வைத்தால்தானே சரியாக இருக்கும்!! கோலியின் தாரக மந்திரம் அதானே!!

அரைக்கை பவுலர் கேதார் ஜாதவ் கடைசியாக எப்போது சர்வதேச கிரிக்கெட் அரைசதம் அடித்தார் என்று தெரியவில்லை.

பிட்ச் புற்கள் இல்லாமல் பேட்டிங் பிட்சாக உள்ளது, ஆனால் இங்கு அதிகபட்ச ஸ்கோர் 300 ரன்களுக்குக் கீழ்தான் இதுவரை இருந்துள்ளது. மேலும் 2வது பேட் செய்த அணி 21 முறையும் முதலில் பேட் செய்த அனி 11 முறையும் வென்றுள்ளது.

ஆனால் இந்திய அணி இப்போதெல்லாம் டாஸ் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.

இந்திய அணி: அகர்வால், ஷா, கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ராகுல், கேதார் ஜாதவ், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், மொகமட் ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூஸிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், ராஸ் டெய்லர், நீஷம், கிராண்ட் ஹோம், சாண்ட்னர், சோதி, டிம் சவுத்தி, ஹாமிஷ் பென்னட்.

SCROLL FOR NEXT