இந்த ஆண்டுக்கான பிரான்ஸின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பிரெஞ்ச் லீக் 1 சாம்பியனான பாரிஸ் செயின்ட்-ஜெர்மெயின் அணியின் ஜாதன் இப்ராஹிமூவிக் தட்டிச் சென்றுள்ளார்.
இந்த சீசன் பிரெஞ்சு லீக் 1 போட்டியில் இன்னும் ஓர் ஆட்டம் மீதமுள்ளது. அதில் இதுவரை 25 கோல்களை அடித்துள்ள இப்ராஹிமூவிச் அதிக கோல்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இதுதவிர அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 40 கோல்கள் அடித்துள்ள இப்ராஹிமூவிக், ஒரு சீசனில் அதிக கோல் அடித்தவரான ஆர்ஜென்டீனாவின் கார்லோஸ் பியான்சியின் சாதனையையும் (39 கோல்கள், 1978-ம் ஆண்டு) முறியடித்துள்ளார்.